அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய ஊர்வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. உலக விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சொம்புமூக்கு முதலை மற்றும் சதுப்பு நில முதலைகளில் மூன்று ஜோடிகளை அந்த சரணாலயத்திற்கு கொண்டு சென்று வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை அந்த சரணாலய நிர்வாகம், அமெரிக்க மீன் மற்றும் விலங்குகள் சேவை மையத்திடம் கோரியுள்ளது. இதனையடுத்து, அமெரிக்க அரசாங்கம் தமிழகத்தில் இருந்து முதலைகளை கொண்டு வரலாமா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் முதலைப் பண்ணை, 1976-ம் ஆண்டு ரோமுலஸ் வொயிடேகர், ஜய் வொயிடேகர் ஆகியோரால் முதலைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. இந்த பண்ணையில் இருந்து அந்த 3 ஜோடி முதலைகளும் அனுப்பட்ட உள்ளது.