'போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை' - பாலியல் வன்கொடுமையால் பாதித்தப் பெண் காவல் நிலையத்தில் விஷம் அருந்தினார்

பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை'போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை' - பாலியல் வன்கொடுமையால் பாதித்தப் பெண் காவல் நிலையத்தில் விஷம் அருந்தினார்

உத்தர பிரதேசத்தில் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமி, தனது புகாரின் மீது 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி பரேலி கூடுதல் காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்குள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிபிட் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர்களது பக்கத்து வீட்டில் உள்ள ஒரு நபர் மற்றும் அவரின் நண்பரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுங்கரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாகப் பேசிய விஷம் அருந்திய சிறுமியின் சகோதரி, " போலீஸார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, பரேலி மண்டல ஏடிஜிபி அலுவலகத்துக்கு வந்தோம். அப்போது ​​ஒரு இன்ஸ்பெக்டர் இந்த வழக்கு தவறானது என்று கூறினார். இதனால் மனமுடைந்த என் சகோதரி விஷத்தை உட்கொண்டார்" என்று கூறினார். அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது ஏடிஜி பிசி மீனா அவரது அலுவலகத்தில் இல்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in