ஆக்ரா மாநகராட்சிக்கு ரூ.9.35 கோடி அபராதம்: யமுனை ஆற்றில் கழிவுநீர் கலந்ததற்காக அதிரடி!

யமுனை
யமுனை ஆக்ரா மாநகராட்சிக்கு ரூ.9.35 கோடி அபராதம்: யமுனை ஆற்றில் கழிவுநீர் கலந்ததற்காக அதிரடி!

யமுனை ஆற்றில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய ஆக்ரா மாநகராட்சிக்கு உத்தர பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.9.35 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் சுத்திகரிக்கப்படாமல் யமுனையில் விழும் எட்டு வடிகால்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, யமுனையில் சுத்திகரிப்பு இல்லாமல் நேரடியாக விழும் 8 வடிகால்களுக்கு மாதம் ரூ.8 லட்சம் அபராதம் விதித்து உத்தரபிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை சுற்றுச்சூழல் அதிகாரி, ஆக்ரா நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு முன்பே பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் புறக்கணித்ததால், இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, ஆக்ரா ஜல் நிகாம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், யுபிஎம்ஆர்சி, மற்றும் ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் ஆகிய நிறுவனங்களுக்கும் சுற்றுச்சூழல் மாசுபட்டுக்காக இதேபோன்ற அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆக்ராவில் தாஜ்மஹால் கிழக்கு கேட், மண்டோலா, வாட்டர் ஒர்க்ஸ், நாராயாச், நாலா பைரோன், புத்தி கா நாக்லா, அனுராக் நகர் மற்றும் பீலா கர் பகுதிகளில் உள்ள 8 வடிகால்களை ஆய்வு செய்தது. ஆய்வின் போது, இரு வடிகால்களில் மட்டுமே உயிரி சீரமைப்பு பணிகள் நடப்பது கண்டறியப்பட்டது. கழிவுநீர் நிரம்பி ஆற்றில் கலப்பதால் யமுனையின் நீரின் தரம் பாதிக்கப்படுகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in