உபி முதல்வர் யோகி ஆதியத்நாத் கொலை மிரட்டலில் வெளிப்பட்ட காதல் விவகாரம்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதன் பின்னணியில் ஒளிந்திருந்த காதல் விவகாரத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

மாநில காவல்துறையின் கட்டணமற்ற அவசர அழைப்பான ’112’ என்ற எண்ணுக்கு நேற்று ஓர் அழைப்பு வந்தது. அதில், முதல்வர் யோகி கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், காவல்துறைக்கான வாட்ஸ் ஆப் தொடர்பு எண்ணுக்கும் அதே மிரட்டல் தகவலாக அனுப்பப்பட்டிருந்தது.

ஒரே எண்ணிலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பு மற்றும் தகவலை அடுத்து, அந்த எண்ணுக்கு உரிய நபரை லக்னோ போலீஸார் எளிதில் வளைத்தனர். ஆனால் சஜத் ஹூசைன் என்னும் அந்த நபரோ, தன்னுடைய மொபைல் போன் காணாமல் போய் 2 நாட்களாகிறது என்றார். இதனையடுத்து சஜத் ஹூசைன் குறித்து அந்தப் பகுதியில் போலீஸார் விசாரித்தபோது வேறொரு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அமீன் என்ற 18 வயது இளைஞரை லக்னோ போலீஸார் கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், சஜத் ஹூசைனின் செல்போனை திருடியதாக தெரிவித்ததோடு, அந்த செல்போன் மூலமாக முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

சஜத் ஹூசைன் மகளை அமீன் காதலித்து வந்துள்ளாராம். ஆனால் இருவரும் பழகுவதற்கு சஜத் ஹூசைன் எதிர்ப்பு தெரிவித்தாராம். மேலும் மகளுடன் பேசக்கூடாது எனவும் அமீனை திட்டி விரட்டியுள்ளார். இது தொடர்பான கோபத்தில் இருந்த அமீன், சஜத் ஹூசைனை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சஜத்தின் செல்போனை திருடியவர், அதிலிருந்து முதல்வருக்கு கொலை மிரட்டல்களை விடுத்திருக்கிறார்.

அமீனை கைது செய்த லக்னோ போலீஸார், முதல்வருக்கு எதிரான கொலை மிரட்டல் பிரிவுகள் மட்டுமல்லாது, செல்போன் திருட்டு வழக்கின் கீழும் வழக்கு பதிவு செய்து, இன்று(ஏப்.26) லக்னோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்கின்றனர் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in