வரதட்சணையாக கார் தராத கோபத்தில் திருமணமான 2 மணிநேரத்தில் தலாக் கொடுத்த மணமகன்; பாய்ந்தது வழக்கு!

வரதட்சணையாக கார் தராத கோபத்தில் திருமணமான 2 மணிநேரத்தில் தலாக் கொடுத்த மணமகன்; பாய்ந்தது வழக்கு!
வரதட்சணையாக கார் தராத கோபத்தில் திருமணமான 2 மணிநேரத்தில் தலாக் கொடுத்த மணமகன்; பாய்ந்தது வழக்கு!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த நபர் ஒருவர், திருமண சடங்கு முடிந்த இரண்டு மணி நேரத்தில், மணப்பெண்ணுக்கு முத்தலாக் கூறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணையாக கார் கொடுக்காததால் மணமகன் அதிருப்தியடைந்து இந்தச் செயலை செய்துள்ளார்.

இது குறித்துப் பேசிய மணப்பெண்ணின் சகோதரர் கம்ரான் வாசி, தனது இரு சகோதரிகளான டோலி மற்றும் கௌரி ஆகியோருக்கு ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரே நாளில் திருமணம் நடந்ததாக தெரிவித்தார். திருமண சடங்கிற்குப் பிறகு டோலியின் மணமகன் முகமது ஆசிப், வரதட்சணையாக கார் வழங்காததால் அதிருப்தியடைந்தார் என்று கூறினார்

மேலும், இப்போதே கார் வாங்கித் தர வேண்டும் அல்லது அதற்கு பதிலாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். டோலியின் குடும்பத்தினர் இவ்வளவு சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறியதால், ஆசிப் முத்தலாக் கூறிவிட்டு தனது குடும்பத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து கம்ரன் வாசி அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிப் மற்றும் 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ், மூன்று முறை 'தலாக்' சொல்லி ஒரு பெண்ணை விவாகரத்து செய்வது கிரிமினல் குற்றமாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in