ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை; தள்ளுவண்டியில் தாயை சுமந்து சென்ற மகன் - உ.பியில் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை; தள்ளுவண்டியில் தாயை சுமந்து சென்ற மகன் - உ.பியில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், ஒரு நபர் தனது நோய்வாய்ப்பட்ட தாயை கை வண்டியில் நான்கு கிலோமீட்டர் தூரம் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜலாலாபாத் நகரில் வசிக்கும் தினேஷ் (45) என்பவரின் தாய் பினா தேவிக்கு (65) இன்று அதிகாலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தார்கள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் தினேஷ் தனது தாயை உள்ளூர் மருத்துவமனைக்கு கை வண்டியிலேயே அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் அந்த பெண்ணை பரிசோதித்துவிட்டு, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பேசிய ஜலாலாபாத் சமூக சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் மருத்துவர் அமித் யாதவ், “தினேஷ் தனது தாயை சிகிச்சைக்காக ஒரு கை வண்டியில் அழைத்து வந்துள்ளார். தகவல் கிடைத்ததும் நோயாளியை பரிசோதனை செய்தேன். ஆனால் அவர் வழியிலேயே நோயாளி இறந்துவிட்டார்” என்று கூறினார்.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் ஒரு பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், இதுபற்றி பேசிய ஷாஜஹான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி பி.கே.வர்மா, “இந்த சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் இது குறித்து விசாரிக்கப்படும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in