மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக உ.பி மருத்துவர் பிரசாந்த் லவானியா நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக உ.பி மருத்துவர் பிரசாந்த் லவானியா நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015 பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகி 2018-ம் தேதி மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2019 ஜனவரி 27-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் கட்டுமானப்பணிகள் இன்னும் தாெடங்கவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கான வகுப்புகள் நடக்கின்றன.

இந்த நிலையில், மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமித்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இவர் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in