கல்லூரிக் கழிவறையில் சிசிடிவி கேமரா - மாணவர்கள் போராட்டம்: நிர்வாகம் சொன்ன காரணம் என்ன?

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமராகல்லூரிக் கழிவறையில் சிசிடிவி கேமரா - மாணவர்கள் போராட்டம்: நிர்வாகம் சொன்ன காரணம் என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரிக் கழிவறைக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதைக் கண்டித்து, அக்கல்லூரி மாணவர்கள் இது ‘தனியுரிமைக்கு எதிரானது’ என்று போராட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் உள்ள டிஏவி பிஜி கல்லூரி நிர்வாகத்தினர், தண்ணீர் பைப் திருடனை பிடிப்பதற்காக கழிவறைக்கு வெளியே சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்கள். இது 'தனியுரிமையை பாதிக்கும்' என்று குற்றம் சாட்டி கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், "கல்லூரி வளாகத்தில் தண்ணீர் குழாய்கள் தொடர்ந்து திருடப்படுகின்றன. எனவே, பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அதில் ஒரு கேமரா தவறுதலாக கழிவறையை நோக்கி வைக்கப்பட்டது. அதை அகற்றி மீண்டும் வேறு இடத்தில் நிறுவ உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய கல்லூரி முதல்வர், ''குழாய் திருட்டை கண்காணிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்து, நான் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்" என தெரிவித்தார். கல்லூரி நிர்வாகத்தின் உறுதிமொழியை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in