15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை: ஒப்புதல் அளித்தது உ.பி அமைச்சரவை

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை: ஒப்புதல் அளித்தது உ.பி அமைச்சரவை

மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பழைய வாகனங்களை அகற்றும் கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங் தெரிவித்திருக்கிறார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பழைய வாகனங்களை அகற்றும் கொள்கைக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை ரத்து செய்தால் வரி மற்றும் அபராதத்தில் 50 சதவீதமும், 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு 75 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்படும் என உ.பி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், "இன்று புதிய ஸ்கிராப் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு வரி மற்றும் அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும். புதிய ஸ்கிராப்பிங் கொள்கை மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும். இதற்காக மத்திய அரசு ரூ.300 கோடி நிதியுதவி அளிக்கும்” என தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய, மாநில அரசுகளின் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களையும் ரத்து செய்யும் வரைவு அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய விதியானது மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறையின் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என தெரிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in