சென்னைக்கு அருகே தீண்டாமை சுவர் இடிப்பு: பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிப்பு!

சென்னைக்கு அருகே தீண்டாமை சுவர் இடிப்பு: பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிப்பு!

திருவள்ளூர் அருகே பட்டியலின மக்களைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை வருவாய்த் துறையினர் அகற்றினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. இதனால், பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சல் மற்றும் கூலி தொழிலுக்கு அந்த வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சுவர் பட்டியலின மக்களைப் பாதிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அந்த சுவரை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று அதிகாலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில், சுமார் 150க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் அந்த மதில் சுவர் அகற்றப்பட்டது. ஆனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை அதிகாரிகள் அகற்றவில்லை. அந்த முள்வேலியையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சற்று நேரம் சலசலப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in