சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: கரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: கரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி

கரோனா பரவல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலையில் கரோனா பாதிப்பு குறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டியளித்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடனடி முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிச. 27-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலம் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி கொண்டு வரப்படுகிறது. 27-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று இரவு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.

வீணா ஜார்ஜ்
வீணா ஜார்ஜ்

இந்த நிலையில் கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்," கரோனா தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது- தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. சபரிமலை தரிசனம் குறித்து தற்போது எந்த கவலையும் இல்லை. தேவைப்பட்டால் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in