திருமணம் செய்யாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமணம் செய்யாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த்து.இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு. கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி'உடைவர்கள் எனவும், திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in