குடிக்கு அடிமை, திருமணமாகாததால் விரக்தி: உயிரை மாய்த்துக்கொண்ட காவலரின் சகோதரர்

தற்கொலை
தற்கொலை குடிக்கு அடிமை, திருமணமாகாததால் விரக்தி: உயிரை மாய்த்துக்கொண்ட காவலரின் சகோதரர்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரும், இவரது மனைவியும் இறந்துவிட்ட நிலையில் இவரது இளைய மகன் இசக்கிமுத்து மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரர் இசக்கிமுத்து சென்னையில் காவலராக உள்ளார். இசக்கி முருகனுக்கு 33 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு தீராதக் குடிப்பழக்கமும் இருந்தது. திருமணம் ஆகாத மன வருத்தத்தில் தனிமையில் இருந்த இசக்கிமுத்து அதையே நினைத்து புலம்பியும் வந்தார். குடிக்கும் அடிமையாகி இருந்தார்.

தொடர்ந்து புலம்பியபடியே இருந்த இசக்கிமுத்துவை அவரது பெரியப்பா மகனான முருகன் என்பவர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்ற இசக்கிமுத்து வீடு திரும்பினார். இந்த நிலையில் தனக்குத் திருமணம் ஆகாத விரக்தியில் இன்று காலையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆறுமுகநேரி போலீஸார் இசக்கிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in