10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு; அடுத்து ரயில்வேயில் 40 பேருக்கு குறி: அதிரடி காட்டும் அமைச்சர்

10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு; அடுத்து ரயில்வேயில் 40 பேருக்கு குறி: அதிரடி காட்டும் அமைச்சர்

ஊழல் குற்றச்சாட்டு, வேலையில் மெத்தன போக்கு காட்டி வந்த மூத்த அதிகாரிகள் 10 பேருக்கு கட்டாய ஓய்வளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உத்தரவிட்டார்.

மத்திய தகவல் தொடர்பு துறையில் இணை செயலர், கூடுதல் இணை செயலர் அளவில் மூத்த அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 10 அதிகாரிகளின் செயல்பாடுகளின் மீது சந்தேகம் எழுந்தது. விசாரணையில், அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் அவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்க உத்தரவிட்டதுடன், மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பரிந்துரைத்தார்.

ரயில்வே துறையிலும் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்கள் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை அளிக்க மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரயில்வே, தொலைதொடர்பு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in