எதிர்பார்த்தோம், ஆனால் அது இல்லை: பட்ஜெட் குறித்து சசிகலா கருத்து

சசிகலா
சசிகலாபட்ஜெட் குறித்து சசிகலா கருத்து

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை உற்று நோக்கும்போது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது போன்ற ஒரு சில சாதகங்களும், நெல் கொள்முதல் விலை உயர்வு இல்லாதது போன்ற ஏமாற்றங்களும் நிறைந்துள்ளது என சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதாக அறிவித்து இருப்பது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் 20 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தி வழங்கி இருப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக உள்ளது. உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய வேண்டிய தேவை உள்ளது. நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பெண்களுக்கு 7.5 சதவீத வட்டியில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்துவதாக சொல்லியிருப்பது, புதிதாக ஒரு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்க இருப்பது வரவேற்கத்தக்கது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தி இருந்தாலும் வரிவிலக்கு இதைவிட கூடுதலாக 5 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. MSME நிறுவனங்களுக்கு இணை பாதுகாப்பு ஏதும் இல்லாமல் 2 லட்சம் வரை கடன் வழங்குவது வரவேற்கத்தக்கது.

கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிதியாக 5300 கோடி ஒதுக்கி இருப்பது போன்று தமிழகத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதி ஒதுக்கி இருந்தால் ஆறுதலாக இருக்கும். மொத்தத்தில் சாதகங்கள், ஏமாற்றங்கள் நிறைந்த பட்ஜெட்டாக இது உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in