மத்திய பட்ஜெட் 2023: ரூ. 7 லட்சம் வரை வருமான வரிவிலக்கு

மத்திய பட்ஜெட் 2023
மத்திய பட்ஜெட் 2023மத்திய பட்ஜெட் 2023: ரூ. 7 லட்சம் வரை வருமான வரி விலக்கு

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு என மத்திய பட்ஜெட் அறிவித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு மொத்த வருமானம் ஒரு 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

• செல்போன் உதிரி பாகங்களுக்கு சுங்கவரி குறைப்பு, நாட்டின் செல்போன் உற்பத்தி 5.8 கோடியில் இருந்து 31 கோடியாக அதிகரிப்பு

• முதியோர் வைப்பு தொகை வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.33 லட்சமாக உயர்வு

• பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

• மின்சார பரிமாற்றத்துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

• கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம்

• பழைய வாகனங்கள் மற்றும ஆம்புலன்ஸ்களை மாற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஆதரவு

• புதிய பழகுநர் திட்டத்தின் கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி

• ஒருங்கிணைந்த வருமானவரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.

• தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு. இதனால் ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

• செல்போன், தொலைக்காட்சி உற்பத்திரிக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்கவரி குறைப்பு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in