90 கோடியை குறைத்துவிட்டது மத்திய அரசு: பட்ஜெட்டால் மாற்றுத்திறனாளி அமைப்புகள் வேதனை

மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள்மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு - மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கண்டனம்

மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.90 கோடி குறைக்கப்பட்டுள்ளதற்கு மாற்றுத்திறனாளி அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு ஆங்காங்கே போராட்டம் நடத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய பட்ஜெட் குறித்து மாற்றுத்திறனாளி அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 240.39 கோடியில் இருந்து  150 கோடி ரூபாயாக (90 கோடி ரூபாய்) கடுமையாக நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு தரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பங்கு, தற்போது வரை ரூ.300 மட்டுமே, அதுவும் நாட்டிலுள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 3.8 சதவீதம் பேருக்கு மட்டுமே அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 80 சதவீதத்துக்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. 10 ஆண்டுகள் மேலாகியும், மத்திய அரசு இதனை உயர்த்த மறுக்கிறது.

கிராமப்புற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெற்றுவரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கிற வகையில் 30% நிதி – ரூ.13,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

உலக வறுமை பட்டியலில் மிக மோசமாக 107-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து இல்லாதது மாற்றுத்திறனாளிகளை கூடுதலாக உருவாக்குகிற அபாயம் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து-ஐசிடிஎஸ். பிரதம மந்திரி போஷன் யோஜனா மற்றும் உணவுத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு கடும் நிதி வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை - ஏழைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும், ஏமாற்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மத்திய அரசின் மோசடி பட்ஜெட்டை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கிற வகையிலும் ஆங்காங்கே கண்டனப் போராட்டங்கள் நடத்த வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in