இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை: சி.எம்.ஐ.இ அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை: சி.எம்.ஐ.இ அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாதத்தில் 7.83 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாக இருந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறப்பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை மார்ச் மாதத்தில் 8.28 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 9.22 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 7.18 சதவீதமாக இருந்தது. அதிகபட்சமாக ஹரியானாவில் 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும், பிஹாரில் 21.1 சதவீதமாகவும் இருந்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாக இருந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செவர்லே, மேன் டிரக்ஸ், யுனைட்டட் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன், ஃபோர்டு, ஃபியட் , டாட்சன் ஆகிய 7 பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆலையை மூடியிருந்தது. இதுகுறித்து அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 9 ஆலைகள் மூடப்பட்டுள்ளதுடன் 649 விநியோகஸ்தர்களின் கடைகள் மூடப்பட்டு 84 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in