மழையில் பயிர்கள் சேதம் - வங்கி கடனை செலுத்த முடியாத கவலை: விவசாயி எடுத்த பரிதாப முடிவு

மழையில் பயிர்கள் சேதம் - வங்கி கடனை செலுத்த முடியாத கவலை: விவசாயி எடுத்த பரிதாப முடிவு

மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழையில் பயிர்கள் சேதமானதால் கடனை திருப்பி செலுத்த முடியாத கவலையில், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ராஜேகான் கிராமத்தில் வசிக்கும் ரம்பத் சவுத்ரி (54), வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

நான்கு ஏக்கர் நிலத்தை வைத்திருந்த சவுத்ரி, 2020ல் ரூ.2.17 லட்சமும், 2021ல் ரூ. 65,000 கடனும் வங்கியில் வாங்கியிருந்தார். நீண்ட காலமாக பெய்த மழையால் அவரது பயிர்கள் சேதமடைந்ததால், அவர் சுமார் ரூ. 3 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். வங்கி கடன் அழுத்தம் ஒருபுறம், பயிர்கள் சேதமான கவலை மறுபுறம் என விவசாயி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று முகெத் காவல் நிலையப் பொறுப்பாளர் கோபால் கோஸ்லே தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in