உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

16 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்... வெளியிட்டது உத்தவ் தாக்கரே சிவசேனா!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 16 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) இன்று வெளியிட்டது.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) - தேசிய அளவில் இந்தியா கூட்டணியாக உள்ளது. இதில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) இன்னும் அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ், தொகுதி பங்கீட்டில் சிக்கல் இல்லாத 11 இடங்களில் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சி போட்டியிடும் 16 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனந்த் கீதா, அர்விந்த் சாவந்த் முறையே ராய்காட், தெற்கு மும்பை தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
தானே தொகுதியில் ராஜன் விசாரையும், மும்பை வடமேற்கில் அமோல் கீர்த்திகரையும், மும்பை வடகிழக்கில் சஞ்சய் பாட்டீலையும் அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
48 மக்களவை இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்துக்கு (80) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏப்ரல் 19, 26, மே 7, 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக இங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

x
காமதேனு
kamadenu.hindutamil.in