காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞர்கள்: ஒருவர் உடல் மீட்பு

ஆற்றில் இளைஞர்களை தேடும் பணி
ஆற்றில் இளைஞர்களை தேடும் பணி

கரூர் அருகே குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தவர்கள்  காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது  ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஸ்வா (24), ஜெகநாதன் மகன் புருஷோத்தமன் (18) ஆகியோர் இன்று மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி  தங்கள் குடும்பத்துடன்  கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்திருந்தனர். வழிகாட்டி ஒரு பகுதியாக  ஆற்றில் தீர்த்தக் குடம் எடுத்துச் செல்ல காவிரி ஆற்றுக்கு வந்தவர்கள் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதே மணல் சூழலில் மாட்டிக் கொண்ட விஷ்வா மற்றும் புருஷோத்தமன் ஆகிய  இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது சுழலில் சிக்கிய  இரண்டு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் கரை ஒதுங்கினர்.  நீரில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்ட விஷ்வாவையும், புருஷோத்தமனையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி தேடிவந்தனர். அதில் ஒரு இளைஞரை மட்டும் இறந்த நிலையில் மீட்டனர். மற்றொருவரை தேடும் பணி தீயணைப்பு படையினர் உதவியுடன் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in