தந்தைக்கு சாராயம் கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபர்களின் டார்ச்சரால் உயிரை மாய்த்த சோகம்

தந்தைக்கு சாராயம் கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபர்களின் டார்ச்சரால் உயிரை மாய்த்த சோகம்

தந்தைக்கு சாராயம் கொடுத்துவிட்டு, சிறுமியான  அவரது  மகளுடன் உல்லாசமாக இருந்த இரு வாலிபர்களை, அந்த சிறுமி  தற்கொலை  செய்து கொண்ட நிலையில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இது மாணவியின் தந்தைக்கு தெரிய வந்ததையடுத்து இருவரையும் அழைத்து சத்தம் போட்டார். இதனால் என்ன செய்வதென்று யோசித்த பிரதாப்  மாணவியின் தந்தைக்கு  குடிப்பழக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அவருக்கு மது வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தி உள்ளார்.

புதுவையில் இருந்து பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்து மாணவியின் தந்தையை மது மயக்கத்துக்கு ஆளாக்குவார்.  அவர் மயக்கத்தில் இருக்கும் போது  பிரதாப் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலை தொடர்ந்து நீடித்த நிலையில் இந்த விஷயம் பிரதாப்பின் நண்பர் களிக்குப்பத்தை சேர்ந்த புவனேஸ் (21) என்பவருக்கு  தெரியவந்தது.  அவரும் நாளடைவில்  மாணவியின் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்.  

சிறுமியை அடைந்துவிட வேண்டும் என்று திட்டம் போட்ட புவனேஸ் ஒரு நாள்  சாராயத்துடன் வந்து மாணவியின் தந்தைக்கு கொடுத்துள்ளார்.  அதைக் குடித்த மாணவியின் தந்தை  மயங்கினார். அதன் பின்னர் அந்த மாணவியை புவனேஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  கடந்த சில நாட்களாக அடிக்கடி தனித்தனியாக 2 வாலிபர்கள் வந்து சென்றதை கிராம மக்கள் பார்த்துவிட்டு இதுகுறித்து சாடை மாடையாக பேச ஆரம்பித்தார்கள்.  

இதனால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று இரவு வீட்டில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போதை தெளிந்து எழுந்த மாணவியின் தந்தை தனது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் புவனேஸ், பிரதாப் ஆகியோர் குறித்த தகவல் தெரியவந்தது. அதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.  தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீஸார் தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in