விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி: கழிவுநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்பு

மணிகண்டன்
மணிகண்டன்

விழுப்புரம் அருகே கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அய்யப்பன்
அய்யப்பன்

விழுப்புரம்  கண்டமங்கலம் அருகே கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் உள்ள  கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான மணிகண்டன், அய்யப்பன் ஆகியோர்  இறங்கியுள்ளனர். 

அப்போது விஷவாயு தாக்கிய மூச்சு திணறல் ஏற்பட்டு மணிகண்டன், அய்யப்பன் உள்ளிட்ட இரண்டு பேரும் மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே விழுந்துவிட்டனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கியவர்களை தூக்கி மேலே கொண்டு வந்து பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. 

இத்தகவலறிந்த  கண்டமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மணிகண்டன், அய்யப்பன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி என்பதால் அதில் கழிவுநீர் எதுவும் இல்லை என்பதும், நீண்ட நாட்களாக மூடியே வைக்கப்பட்டிருந்ததால்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என   போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in