செல்போன் சுவிட்ச் ஆப்; தமிழகப் பெண் உள்பட இருவர் கேரளத்தில் நரபலி: பதறவைக்கும் தகவல் அம்பலம்

செல்போன் சுவிட்ச் ஆப்; தமிழகப் பெண் உள்பட இருவர் கேரளத்தில் நரபலி: பதறவைக்கும் தகவல் அம்பலம்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட இரு பெண்கள் கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணும், காலடி பகுதியைச் சேர்ந்த ரொஸாலி என்னும் பெண்ணும் கேரளத்தில், கொச்சின் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு பத்தனம் திட்டா மாவட்டத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக வேலை வாங்கிக் கொடுக்கும் ஏஜென்ட் ஒருவர் அழைத்துச் சென்றார். அதன் பின்பு பத்மா குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. அவரது உறவினர்கள் அலைபேசியில் அழைத்த போதும், பத்மாவின் தொலைபேசி ரிங் ஆகவில்லை. இதனால் பத்மாவின் உறவினர்கள் இதுகுறித்து கொச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

பத்மாவின் செல்போன் எண்ணை சைபர் க்ரைம் போலீஸாருக்கு அனுப்பி இதுகுறித்து விசாரித்தனர். அப்போது பத்மாவின் செல்போன் கடைசியாக பத்தனம் திட்டா மாவட்டத்தின் திருவலா பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திற்கும் சென்று போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் பத்தனம் திட்டாவில் மசாஜ் சென்டர் வைத்திருக்கும் லைலா-பகவந்த் சிங் தம்பதியினர் இருவரையும் நரபலி கொடுத்திருக்கும் தகவல் வெளியானது. திருவலா பகுதியில் இந்த தம்பதியின் வீட்டிலேயே நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர். இருவரது உடலும் தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் சோதனை அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in