திருடிய டூவீலரை விற்க வாட்ஸ் அப்பில் விளம்பரம்: திட்டமிட்டு திருடனைத் தூக்கிய போலீஸ்

திருடிய டூவீலரை விற்க வாட்ஸ் அப்பில் விளம்பரம் செய்த வாலிபர் கைது
திருடிய டூவீலரை விற்க வாட்ஸ் அப்பில் விளம்பரம் செய்த வாலிபர் கைதுதிருடிய டூவீலரை விற்க வாட்ஸ் அப்பில் விளம்பரம்: திட்டமிட்டு திருடனைத் தூக்கிய போலீஸ்

டூவீலர்களைத் திருடி, அதை சில காலம் பயன்படுத்திவிட்டு வாட்ஸ் அப் வழியே அதை விற்பனை செய்வதாக பகிர்ந்து வருவாய் ஈட்டி வந்த திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி(25). இவர் உடல் நலப் பிரச்சினைக்காக மருத்துவமனை செல்ல சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்கு டூவீலரில் வந்தார். அங்கு டூவீலரை மருத்துவமனை அருகே சாலையில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் சென்றார். அவர் திரும்பி வந்துபார்த்தபோது அவரது டூவீலரைக் காணவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் மாயாண்டி புகார் கொடுத்தார். போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர், மாயாண்டியின் டூவீலரைத் திருடிச் செல்வது தெரியவந்தது. ஆனாலும், அவர் யாரென்று சரியாக அடையாளம் காணப்படவில்லை. இந்த திருட்டு வழக்குத் தொடர்பாக மாயாண்டி கொடுத்த புகார் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் மாயாண்டி நேற்று செல்போனில் வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொண்டு இருக்கும்போது அதில் ஒரு குரூப்பில் மாயாண்டியின் டூவீலரின் புகைப்படத்தோடு வெளியிட்டு, விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதில் டூவீலரை வாங்க நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணும் இருந்தது. உடனே மாயாண்டி இதை போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவர்கள் டூவீலர் வாங்குவது போல் அழைத்துப் பேசியதில் மாயாண்டியின் டூவீலரைத் திருடியவர், சிலகாலம் அதைப் பயன்படுத்திவிட்டு விற்க முயற்சித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து டூவீலரைத் திருடிய தூத்துக்குடி மாவட்டம், அகரம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் சிவா(20) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in