
மூடப்பட்டு இருந்த ரயில்வே கேட்டில் வேகமாக வந்த பைக் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள அமச்சிகோயில் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் அருண்(36) டிரைவராக வேலை செய்து வந்தார். இவரும், இவரது நண்பர் ஆனந்த் என்பவரும் நேற்று மாலையில் ஒரே பைக்கில் சாத்தான்குளம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை அருண் ஓட்டிச் சென்றார்.
அருண் பைக்கை ஓட்டும்போது பின் சீட்டில் இருந்த நண்பர் ஆனந்திடம் திரும்பித், திரும்பி பேசிய வண்ணம் வந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. தெற்கு வள்ளியூர் பகுதியில் வந்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. அதை அருண் கவனிக்கவில்லை. அவர் கவனக் குறைவாக பைக்கை ஓட்டியதில் பூட்டியிருந்த ரயில்வே கேட்டின் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இதுகுறித்து பணக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூடப்பட்ட ரயில்வே கேட்டைக் கவனிக்காமல் வேகமாக வந்து மோதி வாலிபர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.