சாலைத்தடுப்பில் மோதிய டூவீலர்: துடிதுடித்து 2 வாலிபர்கள் பலி

சாலை தடுப்பில் மோதி பலியான வாலிபர்கள்
சாலை தடுப்பில் மோதி பலியான வாலிபர்கள்சாலைத்தடுப்பில் மோதிய டூவீலர்: துடிதுடித்து 2 வாலிபர்கள் பலி

மதுரை அருகே டூவீலரில் சென்ற வாலிபர்கள் இருவர் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் படபட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சரவணன், (24), இவர் கட்டடசென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன் கவுதம், (24). இவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பரங்குன்றத்தில் இருந்து திருநகருக்கு நேற்றிரவு சென்றனர்.

திருநகர் செல்ல ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனம் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சரவணன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in