அவள் என்னுடைய காதலி; ஒரே பெண்ணை காதலித்த இரண்டு வாலிபர்கள்: சேலத்தில் நடந்த மோதல்

அவள் என்னுடைய காதலி; ஒரே பெண்ணை காதலித்த இரண்டு வாலிபர்கள்: சேலத்தில் நடந்த மோதல்

ஒரு பெண்ணுக்காக இரண்டு வாலிபர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஓமலூரில் நடந்துள்ளது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காரமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கோகுல கண்ணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கங்காணிபட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அந்த பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே, கோகுல கண்ணனும் அந்தப் பெண்ணை காதலிப்பதாக பிரகாசுக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது நண்பர்களுடன் சென்ற பிரகாஷ், கோகுல கண்ணனை மிரட்டி உள்ளார். அப்போது, இரண்து தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பெண்ணிற்காக இரண்டு இளைஞர்கள் மோதி கொண்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in