தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கி கிடந்த வயதான இலங்கைத் தமிழர்கள்!

தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கி கிடந்த வயதான இலங்கைத் தமிழர்கள்!

மயக்க நிலையில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ள மேலும் இரண்டு அகதிகள், மொத்தமாக இதுவரை 92 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இச்சூழலில், இலங்கையில் இருந்து ஒரு வயதான தம்பதி அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். வயதான இருவரும் நீண்ட நேரம் கடலில் பயணித்ததால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம் நிலையில் உள்ளனர்.

தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் பகுதியில் இருவரும் தரை இறங்கியதால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு வர வசதி இல்லாமல் இருந்தது.

இதனையடுத்து, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பிறகு இருவரும் கடலோர படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் படகில் மண்டபம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருவரும் மயக்க நிலையில் இருப்பதால் அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் பெயர் என்ன? அவர்கள் இருவரும் தம்பதிகளா? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. எனவே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவர்.

ஏற்கெனவே 90 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில். தற்போது, வந்துள்ள இருவரையும் சேர்த்து எண்ணிக்கை 92-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in