மண்டை உடைப்பு, வீடு எரிப்பு: சத்தமாக பாட்டு கேட்டவருக்கு வாலிபர்களால் நிகழ்ந்த சோகம்

எரிக்கப்பட்ட வீடு
எரிக்கப்பட்ட வீடு

ரேடியாவில் சத்தத்தை அதிகமாக வைத்து பாட்டு கேட்டதால், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வீட்டை எரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நத்தம் சாணார்பட்டி கொசவபட்டி வடக்கு தெரு பகுதியில் வசிப்பவர் பெனடிக் லூயிஸ் (60). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிபாரதி (21), ஜோசப் ஆரோக்கியம் (22) ஆகியோருக்கும் ரேடியாவில் சத்தத்தை அதிகமாக வைத்து பாட்டு கேட்டதாக கூறி ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.

கைதான இருவர்
கைதான இருவர்

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் மூவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது முற்றி கைகலப்பான நிலையில், இருவரும் பெனடிக் லூயிஸின் மண்டைய உடைத்தனர். மேலும், ஆத்திரத்தில் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இதில், பல்லாயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து பெனடிக் லூயிஸ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்த சாணார்பட்டி காவல்துறையினர் கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் ஆகிய இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in