விருதுநகரில் பிளஸ் டூ மாணவிகள் இருவர் கர்ப்பம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

விருதுநகரில் பிளஸ் டூ மாணவிகள் இருவர் கர்ப்பம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவிகள் இருவர் கர்ப்பமாக இருப்பது போலீஸார், மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் படிப்பை நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சோதித்துப் பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுமி வேலை செய்யும் கம்பெனியில் சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி(26) என்னும் வாலிபர் வேலை செய்துள்ளார். அவர் சிறுமியை அவ்வப்போது பலாத்காரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்தியை சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்!

விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு பிளஸ் டூ மாணவியும் திடீர் உடல் நலக்குறைவால் தவித்தார். அவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த அறிவரசன் என்னும் வாலிபர் தன்னை பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கியதை மாணவி தெரிவித்தார். இதன்பேரில் அறிவரசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருக்கும் அவரைத் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in