ஒரு லட்சம் செலுத்தினால் 1,80 லட்சமாக திருப்பித் தருவதாக 85 கோடி மோசடி : 2 பேர் கைது

பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுஒரு லட்சம் செலுத்தினால் 1,80 லட்சமாக திருப்பித் தருவதாக 85 கோடி மோசடி : 2 பேர் கைது

திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ.85 கோடி மோசடி செய்தவர்கள்  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய  6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டிவனத்தில் இயங்கி வந்த தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பித் தருவதாக விளம்பரப்படுத்தியது. இதையடுத்து ஒரு லட்சம் மற்றும் அதன் மடங்குகளில் ஏராளமானோர் பணம் செலுத்தியிருந்தனர். ஆனால் தீர்வு காண முடிந்து யாருக்கும் இந்த நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை.

அப்படி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வேளாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மண்ணுலிங்கம் (51)  உள்ளிட்ட அவருக்கு தெரிந்த 9 பேர் சேர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் ரூ.55 லட்சத்தை செலுத்தியுள்ளனர்.   முதிர்வுக் காலம் முடிந்தபின்பும் அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் திருப்பித் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். 

அதன்பேரில் அந்நிறுவன நிர்வாக இயக்குநர்கள் மாயகிருஷ்ணன்,  மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கவுதம்,  மதிவாணன்,  முருகன்,  வீரமணி,  செந்தில்குமார் ஆகிய 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 

விசாரணையில் அவர்கள் 8 பேரும் சேர்ந்து,  இது போன்று 7 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரையும் போலீஸார்  தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீரமணி (46),  செந்தில்குமார் (45) ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in