பறித்து செல்லப்பட்ட தாலிச்செயின்
பறித்து செல்லப்பட்ட தாலிச்செயின்பைக்கில் வந்து பெண்ணிடம் 7.5 சவரன் தாலிச்செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது

பைக்கில் வந்து பெண்ணிடம் 7.5 சவரன் தாலிச்செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 7.5 சவரன் தாலிச்செயினைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரேவதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பணியை முடித்து மடிப்பாக்கம் டாக்டர் ராமமூர்த்தி நகர் வழியாக அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ரேவதியின் தாலிச்செயினைப் பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நரேந்திரகுமார்
கைது செய்யப்பட்ட நரேந்திரகுமார்பைக்கில் வந்து பெண்ணிடம் 7.5 சவரன் தாலிச்செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது
கைது செய்யப்பட்ட ஜெகதீஷ்
கைது செய்யப்பட்ட ஜெகதீஷ்பைக்கில் வந்து பெண்ணிடம் 7.5 சவரன் தாலிச்செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது

அப்போது, கிழக்குத்தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நரேந்திரகுமார், மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோர் ரேவதியிடம் செயினைப்பறித்து சென்றதைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரேவதியின் 7.5 சவரன் தாலிச்செயினை மீட்டு அவரிடம் கொடுத்தனர். அத்துடன் செயின் பறிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in