சென்னை கல்லூரி மாணவர்களுக்கு குறி; கர்நாடகாவிலிருந்து வந்த கஞ்சா: சோதனையில் சிக்கிய இளைஞர்கள்

சென்னை கல்லூரி மாணவர்களுக்கு குறி; கர்நாடகாவிலிருந்து வந்த கஞ்சா: சோதனையில் சிக்கிய இளைஞர்கள்

கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதைப்பொருளை சப்ளை செய்து வந்த இருவரை, தாழம்பூர் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையடுத்த தாழம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், விலை உயர்ந்த போதைப்பொருள் விற்கப்படுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாம்பாக்கம் சந்திப்பு அருகே போலீஸார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கேளம்பாக்கத்தை சேர்ந்த சக்தி மற்றும் மணிகண்டன் ஆகியோரை பிடித்து சோதனை செய்த போது, விலை உயர்ந்த போதைப்பொருள் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

பின்னர் இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்து கேளம்பாக்கம், தாழம்பூரை சுற்றியுள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருளை விற்றதாக அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

மேலும் வீட்டில் மளிகை பொருட்களுடன் மறைத்து பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கப்பட்டு இருந்த 300 கிராம் எடை கொண்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள், இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in