மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை: போதை மாத்திரை, ஊசிகளோடு இருவர் கைது

மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை: போதை மாத்திரை, ஊசிகளோடு இருவர் கைது

வலி நிவாரணி மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து போதைக்காக விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 523 மாத்திரைகள்,19 ஊசிகளைப் பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புழுதிவாக்கம், பாலாஜிநகர், 23-வது தெருவில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் பதுக்கி வைத்துள்ளதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் போலீஸார், அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 523 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை போதைக்காக விற்பனை செய்த புழுதிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார்(25), கண்ணதாசன் நகரைச் சேர்ந்த மகேஷ்(32) ஆகியோரைக் கைது செய்தனர்.

விசாரணையில், மும்பையில் இருந்து மாத்திரைகளை வாங்கி வந்து போதைக்காக இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in