தோட்டத்தில் காய்ச்சப்பட்ட சாராயம்: போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய கும்பல்

தோட்டத்தில் காய்ச்சப்பட்ட சாராயம்: போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய கும்பல்

தென்காசி மாவட்டத்தில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தப்பி ஓடினார், 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி அருகே உள்ள ஆயிரபேரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பெயரில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அந்தத் தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஆயிரபேரியை சேர்ந்த முருகையா என்பவரது மகன் கனகராஜ் (31 ) மற்றும் பாட்டபத்து கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் ராமகிருஷ்ணன் (46) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 100 லிட்டருக்கு மேலான சாராயத்தை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கண்ணனை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in