வேகமாக வந்த கார் மோதி மொபெட்டில் சென்ற இளம்பெண், சிறுமி பலி: நெல்லையில் நடந்த துயரச் சம்பவம்!

வேகமாக வந்த கார் மோதி மொபெட்டில் சென்ற இளம்பெண், சிறுமி பலி: நெல்லையில் நடந்த துயரச் சம்பவம்!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வேகமாக வந்த கார் மோதி, இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமி உயிர் இழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியே இன்று சோகத்தில் மூழ்கியது.

நெல்லை மாவட்டம், கேசவநேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி கார்த்திகா (20) இவர் தன் கணவரின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபெட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். வள்ளியூர் நான்குவழிச்சாலையை கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த கார் ஒன்று கார்த்திகாவின் மொபெட்டில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமி சாய் தனியாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும்வழியிலேயே சிறுமி சாய் தனியாவும் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் போலீஸார், காரை அதிவேகமாக ஓட்டிவந்த அமீர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in