மின்னல் வேகத்தில் வந்த கார்... அப்பளமாக நொறுங்கிய ஷேர் ஆட்டோ: உடல் நசுங்கி இருவர் பலி

மின்னல் வேகத்தில் வந்த கார்... அப்பளமாக நொறுங்கிய ஷேர் ஆட்டோ: உடல் நசுங்கி இருவர் பலி

மாமல்லபுரம் அருகே பயணிகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ மீது, பின்னால் அதிவேகமாக வந்த சொகுசுகார் மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் இருந்த இருவர் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகில் தேவனேரி கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் தான் இந்த விபத்து நடந்தது. இந்தச் சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை இன்று ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. ஷேர் ஆட்டோ தேவனேரி பேருந்து நிறுத்தம் அருகே பயணிகளை ஏற்ற மெதுவாகச் சென்றபோது, பின்னால் மாமல்லபுரம் நோக்கிச் சென்ற சொகுசுகார் அதிவேகமாக வந்து ஷேர் ஆட்டோவின் பின்னால் மோதியது.

இதில் ஷேர் ஆட்டோவில் இருந்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த சாம்பலால்(48), வாயலூரைச் சேர்ந்த உண்ணாமலை(54) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரு பயணிகள் படுகாயம் அடைந்து மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்துக் குறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in