உயிருக்கு போராடிய பெரியம்மா; காப்பாற்ற முயன்ற தங்கையின் மகன்: மின்கம்பியை மிதித்ததால் பறிபோன உயிர்கள்

உயிருக்கு போராடிய பெரியம்மா; காப்பாற்ற முயன்ற தங்கையின் மகன்: மின்கம்பியை மிதித்ததால் பறிபோன உயிர்கள்

மின் கம்பியில் சிக்கிய பெரியம்மாவை காப்பாற்ற சென்ற தங்கையின் மகனும் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. திருமணமாகாத இவர், நேற்று மாலை தனது தங்கையின் மகன் மணிகண்டனை அழைத்துக் கொண்டு ஆடு ஓட்ட சென்றுள்ளார். அப்போது மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை பார்க்காமல் சந்திரா மின்கம்பியில் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து பதறிய மணிகண்டன் ஓடிப்போய் பெரியம்மா சந்திராவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பெரியம்மாவை காப்பாற்ற முயன்ற தங்கையின் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in