டூவீலரில் சிட்டாய் வந்து செல்போன் பறிப்பு: போதை மருந்துக்கு அடிமையான சிறுவன் உள்பட இருவர் கைது

டூவீலரில் சிட்டாய் வந்து செல்போன் பறிப்பு: போதை மருந்துக்கு அடிமையான சிறுவன் உள்பட இருவர் கைது

போதை மருந்து வாங்குவதற்காக டூவீலரில் வந்து செல்போன்களைப் பறித்துச் சென்ற சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி புராரி பகுதியில் சமீபத்தில் செல்போன் பறிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிச.23-ம் தேதி 15 வயது இளைஞரின் செல்போனை டூவீலரில் வந்த மர்மநபர்கள் இருவர் பறித்துச் சென்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் போலீஸில் புகார் செய்தார். இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், புராரி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆ ய்வு செய்தனர். அப்போது புராரியில் உள்ள கார்கில் காலனி பகுதியில் உள்ள சிசிடிவியில் செல்போனை பறித்துச் சென்ற இருவரின் அடையாளம் தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள், சஞ்சாய்(37) மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான அவர்கள் இருவரும், போதை மருந்து வாங்க பணத்திற்காக தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த டிச.23-ம் தேதிக்கு முன்பாகவும் பலரின் செல்போன்களை பறித்துச் சென்றதையும் அவர்கள் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட டூவீலர், செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். போதை மருந்துக்கு அடிமையான சிறுவன், இளைஞர் ஒருவருடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் டெல்லி போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in