அடர்ந்த காட்டில் உடலுறவு; இதுவரை நடந்திராத வினோத கொலை: மந்திரவாதி நடத்திய பயங்கரம்

அடர்ந்த காட்டில் உடலுறவு; இதுவரை நடந்திராத வினோத கொலை: மந்திரவாதி நடத்திய பயங்கரம்

அடர்ந்த காட்டில் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது திரவ பசையை ஊற்றி மந்திரவாதி ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தை கலங்கடிக்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதயப்பூர் அருகே கடந்த 18-ம் தேதி 30 வயதான ராகுல் என்பவரும் 28 வயதான சோனு என்ற பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் இதுவரை பார்த்திராத வகையில் அவர்கள் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில், மந்திரவாதி மாதேஷ் குமார் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட ராகுலும் சோனுவும் திருமண உறவை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

சோனுவிடம் தொடர்பில் இருந்து வந்த ராகுல், தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். கணவரின் துன்புறுத்தல் அதிகரிக்கவே மந்திரவாதியை அணுகி உள்ளார் ராகுலின் மனைவி. அப்போது, சோனுவையும், ராகுலையும் தனது இடை இடத்துக்கு அழைத்துள்ளார் மந்திரவாதி. இதையடுத்து, சிறப்பு பூஜை செய்வதாக கூறி அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மந்திரவாதி. அப்போது இருவரிடமும் நீங்கள் வாழ்வில் ஒன்று சேர வேண்டுமானால் நான் சொல்வதை செய்ய வேண்டும் என்று கூறி இருவரையும் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மந்திரவாதி கண்முன்னே இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அப்போது மந்திரவாதி தான் தயாராக வைத்திருந்த திரவ பசையை அவர்கள் மீது ஊற்றி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் எழுந்திருக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. பசை அவர்களின் உடல்களை பிய்த்ததால் அப்படியே இருவரும் கிடந்தனர். இதைத் தொடர்ந்து, ராகுலை கழுத்தை அறுத்தும், சோனுவை கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார் மந்திரவாதி. அதே நேரம் வசீகரிப்பது எப்படி என்று இருவரும் தன்னை நச்சரித்ததால் கொலை செய்ததாகும் மந்திரவாதி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் மந்திரவாதி உடன் சோனு நீண்ட நாட்களாக பேசி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் சோனுவுக்கும் மந்திரவாதிக்கும் இடையே பழக்கம் இருந்ததா? என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மந்திரவாதி ஒருவர் கண்முன்னே ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டிருந்தபோது பசையை ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in