பக்ரைனில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் இருவர் ஆழ்கடலில் மாயம்!

பக்ரைனில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் இருவர் ஆழ்கடலில் மாயம்!

பக்ரைன் நாட்டில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் இருவர் ஆழ்கடலில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமரிமாவட்டம், கடியப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய நஸ்ரின். இவரது மகன் சகாய செல்சோ(37)/ அதே ஊரைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ஆண்டனி வின்சென்ட்(33). இவர்கள் இருவரும் பக்ரைன் நாட்டில் உள்ள தராக் மாஜித் என்பவரால் அவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்தொழிலுக்கு பணியமர்த்தப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கடந்த 17-ம் தேதி பக்ரைன் நாட்டில் உள்ள மொராக் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 19-ம் தேதியே கரை திரும்பியிருக்க வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதனிடையே இவர்கள் ஈராக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதாக கடைசியாகத் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஈராக் கடல் பகுதியில் மீனவர்களைத் தேட வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in