சாலையில் இறந்து கிடந்த வாலிபர்கள்; போலீஸுக்கு தகவல் சொன்ன மக்கள்: திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்

சாலையில் இறந்து கிடந்த வாலிபர்கள்; போலீஸுக்கு தகவல் சொன்ன மக்கள்: திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்

திருவிடைமருதூர் அருகே  அனந்தமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த  இளைஞர்கள்  இருவர் நிலைத் தடுமாறி  மரத்தில் மோதி உயிரிழந்துள்ள மிகவும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் வட்டம், புளியம்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன் மகன் அவினாஷ்(26). இவரது உறவினரான செட்டிமண்டபம், வடக்குத் தெருவைச் சேர்ந்த செளந்தரராஜன் மகன் கணேஷ் (23), கார் ஒட்டுநர்களான இருவரும் காரைக்காலில் நேற்று நடைபெற்ற உறவினர் இல்ல  திருமண நிகழ்ச்சிக்காக பொருட்களைச் சரக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, பின்னால் அபினேஷின் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தனர்.

நேற்று திருமண நிகழ்ச்சி முடிந்த நிலையில்  நள்ளிரவு புறப்பட்டு  இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். கணேஷை பின்னால் அமர வைத்து, அபினேஷ் இரு சக்கர வாகனத்தை ஒட்டிவந்தார். இன்று அதிகாலையில் திருநீலக்குடியை அடுத்த அனந்தமங்கலம்  என்ற இடத்தில்  வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் நிலை குலைந்தது. அதில் சாலையின் ஒரத்திலிருந்த தேக்கு மரத்தில் மோதி இருவரும்  தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர், காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள், இருவர் இறந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களுக்கு  நடந்திருக்கும் இந்த விபரீத முடிவு  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in