மயிலாடுதுறையைத் தொடர்ந்து சென்னையிலும் துயரம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி

மயிலாடுதுறையைத் தொடர்ந்து சென்னையிலும் துயரம்: மின்சாரம் தாக்கி  இருவர் பலி

சென்னையில் புயலால் தண்ணீரில் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்த இருவர் துடிதுடித்து உயிரிழந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகரைச் சேர்ந்தவர் லட்சுமி(40). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். லட்சுமியின் அண்ணன் மகன் ராஜேந்திரன்(30). இவர்கள் அனைவரும் ராம்நகரில் கூரை வீட்டில் வசித்து வந்தனர். 'மேன்டூஸ்' புய காரணமாக கொட்டிய கனமழையில் லட்சுமியின் வீட்டை மழைநீர் சூழ்ந்தது.

இதனால் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்காக நேற்று சென்றுள்ளனர். அப்போது லட்சுமி தடுமாறி தண்ணீரில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற ராஜேந்திரன் சென்ற போது அவரும் தண்ணீரில் விழுந்தார். அப்போது அங்கு ஏற்கெனவே மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனால் லட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in