லாரியை முந்த முயன்ற டூவீலர் மீது நேருக்கு நேராக மோதிய பஸ்: பறிபோன 2 இளைஞர்களின் உயிர்

விபத்தில் 2 இளைஞர்கள் பலி
விபத்தில் 2 இளைஞர்கள் பலிலாரியை முந்த முயன்ற டூவீலர் மீது நேருக்கு நேராக மோதிய பஸ்: பறிபோன 2 இளைஞர்களின் உயிர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த வசந்த பிரசாத் (22), வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (22) என்ற அவரது நண்பருடன் பெரியகிருஷ்ணாபுரம் நோக்கி நேற்று இரவு  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது வாழப்பாடி - கொட்டவாடி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற  லாரியை முந்த முயற்சித்துள்ளனர். அப்போது  ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப்பேருந்து இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது  நேருக்குநோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனா்.

விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீஸாா், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இளைஞர்கள் இருவர் பேருந்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in