துப்பாக்கி முனையில் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை: வயல்வெளியில் நடந்த கொடுமை

துப்பாக்கி முனையில் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை: வயல்வெளியில் நடந்த கொடுமை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இந்து சகோதரிகளை, இருவர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பஹவல்நகர் பகுதியில் ஃபோர்ட் அப்பாஸ் என்ற இடத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இந்து சகோதரிகளை, ஜூன் 5-ம் தேதி காலை இரண்டு ஆண்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை அளித்த புகாரை ஏற்றுக்கொள்ளாமல் பல நாட்கள் காவல்துறையினர் இழுத்தடித்தனர். கடும் அலைக்கழிப்புக்கு பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

இது தொடர்பாக பேசிய அப்பகுதி காவல்துறை அதிகாரி இர்ஷாத் யாக்கூப், " உமைர் அஷ்பாக் மற்றும் காஷிப் அலி என்ற இருவர் அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இரண்டு சிறுமிகளின் மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளின் தந்தையின் புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட உமைர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான காஷிப் அலி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளதால் அவரை கைது செய்ய முடியவில்லை" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in