சப்பரத்தில் பாய்ந்த மின்சாரம்; பறிபோன உயிர்கள்: விநாயகர் சிலையைக் கரைத்துவிட்டு திரும்பியபோது சோகம்

உயிரிழந்த இருவர்
உயிரிழந்த இருவர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகமெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது, இரவு அருகே உள்ள குளத்தில் சிலையைக் கரைத்துவிட்டு திருப்பிய போது சாலையின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சப்பரம் உரசியதில் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்தது.

இதில், மின்சாரம் தாக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முனீஸ்வரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சேத்தூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in