வடமதுரை அருகே ஜீப் மரத்தில் மோதி விபத்து: ஊட்டியைச் சேர்ந்த இருவர் பலி

வடமதுரை அருகே ஜீப் மரத்தில் மோதி விபத்து: ஊட்டியைச் சேர்ந்த இருவர் பலி

வடமதுரை அருகே நடந்த விபத்தில் ஊட்டியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

ஊட்டி குழுசோலையை சேர்ந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஜீப்பில் இன்று வந்தனர். இதன் பின் தரிசனம் முடித்து விட்டு அவர்கள் மணப்பாறை நோக்கி புறப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கெச்சாணிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது.

இதில் ஊட்டி குழுசாலையைச் சேர்ந்த மோகன்ராஜ் (38), அழகுமணி (57) ஆகியோர் உயிரிழந்தனர். அத்துடன் நித்யா (29), சிறுவன் லதுன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை துரிதமாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வடமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in