இருவர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?- சர்ச்சையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

இருவர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?- சர்ச்சையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் நசரத்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி கலாநிதி(64). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்குச் சுவாசப் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள பூச்சிவாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(70) என்பவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்கள் இருவரும் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கலாநிதியின் உறவினர்கள் கூறுகையில், “நேற்று அவருக்காக நான் உணவு வாங்கிவரச் சென்றேன். அதற்குள்ளாக அவர் உயிரிழந்து விட்டார். ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என ஏற்கெனவே மருத்துவர்களிடம் நான் தெரிவித்திருந்தேன். மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், பைப் லைன் வழியாக எல்லோருக்கும் ஆக்சிஜன் செல்வதால், இவர்களுக்கு மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது தவறானது என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in