மூச்சுத்திணறி இரண்டு தொழிலாளர்கள் பலி: கட்டுமானப்பணியின் போது நடந்தது என்ன?

மூச்சுத்திணறி இரண்டு தொழிலாளர்கள் பலி: கட்டுமானப்பணியின் போது நடந்தது என்ன?

தண்ணீர் தொட்டியின் கட்டுமானப் பணியின் போது மூச்சுத் திணறி இருவர் உயிரிழந்த சம்பவம் வேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் தண்ணீர் தொட்டி கட்டுமானப் பணியில் வெங்கடேசன், முருகன், முருகேசன் உள்ளிட்ட நான்கு பேர் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை அந்த தண்ணீர் தொட்டியின் சென்ட்ரிங் பிரிக்கும் பணியின் போது வெங்கடேசன், முருகன் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அந்த தொட்டியிலேயே அங்கேயே மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அவர்கள் மூவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் மற்றும் முருகேசன் ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் முருகன் என்பவர் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in